< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
4 மாநில தேர்தல் முடிவுகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
|3 Dec 2023 5:38 PM IST
சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேளை தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில் 4 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஏற்படும் வகையிலான சிறப்பான ஆட்சி அமைய வாழ்த்துகிறேன்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.