< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்
திருச்சி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு 'சீல்'

தினத்தந்தி
|
15 July 2022 1:44 AM IST

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வரும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் தொடர்ச்சியாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு 'சீல்' வைக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவசர தடையாணை அறிவிப்பின் மூலமாக மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள், திருச்சி அதவத்தூர் தோகைமலைரோடு எஸ்.எல்.எஸ். மளிகை, திருச்சி வியாழன்மேடு இனாம்புலியூர் சரவணா மளிகை, திருச்சி பெரியஆஸ்பத்திரி ரோடு ஜி.இ.லெட்சுமி டீக்கடை, திருச்சி உய்யகொண்டான்திருமலை சண்முகாநகர் ஸ்ரீராம்ஸ்டோர் ஆகிய 4 கடைகளுக்கு நேற்று முன்தினம் 'சீல்' வைத்தனர்.

மேலும் செய்திகள்