கடலூர்
புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்
|புவனகிரி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புவனகிரி
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கைலாஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன் மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் புவனகிரி கடைவீதி மற்றும் குரியமங்கலம் செல்லும் சாலைகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக்கடை உள்ளிட்ட கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது 2 பெட்டிக்கடை, 2 மளிகைக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் 4 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். புவனகிரி நகர பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.