< Back
மாநில செய்திகள்
வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'

தினத்தந்தி
|
5 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறையில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகரில் நம்பர் 2 சாலை மற்றும் டவுன் விரிவாக்க சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் நகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஒரு சில கடையினர் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகை செலுத்தாமல் அதிக அளவில் நிலுவை வைத்திருந்த கடைகளை மூடி சீல் வைக்கும்படி நகராட்சி ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் நம்பர்- 2 சாலையில் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு நகராட்சி வருவாய் அலுவலர் தினகர் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் வருவாய் உதவியாளர்கள் நேரில் சென்று உடனடியாக நிலுவையின்றி வாடகை செலுத்துமாறு கேட்டனர். அப்படியும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் மூடி சீல் வைத்தனர். இதேபோல டவுன் விரிவாக்க பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கும் என மொத்தம் 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்