< Back
மாநில செய்திகள்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

தினத்தந்தி
|
4 Sept 2024 6:59 PM IST

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்குப் பிறகு மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு கடல்பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

படகில் இருந்த ஒரு மீனவருக்கு உடல்நலம் குன்றிய நிலையில், ஒரு படகில் இருந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்தனர். கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் விசாரணைக்குப் பிறகு மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்