< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
15 July 2023 12:56 AM IST

பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்டாலின் மனைவி ஜெயக்கொடி(வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரி கேண்டீனில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு மொபட்டில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள சவுமியா நகரில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதில் ஜெயக்கொடிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் சங்கிலி, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து செல்வது, தனியாக செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது, மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவது போன்ற சம்பவங்கள் சமயபுரம் பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்