< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
|24 Jun 2023 12:35 AM IST
மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
செந்துறை:
சங்கிலி பறிப்பு
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்னலெட்சுமி(வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை பொட்டவெளி-ராயம்புரம் சாலையில் நடந்து சென்றார்.அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், அன்னலெட்சுமியிடம் ஒரு முகவரி பற்றி கேட்பது போல் நடித்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை திடீரென பறித்தனர்.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சியடைந்த அன்னலெட்சுமி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியின் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.