தஞ்சாவூர்
சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார்ஆயுதப்படைக்கு மாற்றம்
|பேராவூரணி அருகே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் ெசய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்
பேராவூரணிஞ
சூதாட்டம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் ஆகிய போலீஸ் சரக பகுதிகளில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்லும் 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் என கூறி கொண்டு சூதாடியவர்களை விரட்டி பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை அள்ளி செல்லும் சம்பவம் நடைபெற்றதாக பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகானுக்கு புகார் வந்தது.
இதுதொடர்பாக அவர் நடத்திய விசாரணையில் சூதாட்டக்காரர்களிடம் இருந்து பணத்தை அள்ளி சென்றதில் போலீசாருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
4 பேருக்கு ஆயுதப்படைக்கு மாற்றம்
இதைத்தொடா்ந்து அவர் அளித்த அறிக்கையின் பேரில் பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை போலீசார் சுரேந்திரன், ராகவன், சிம்ரான் ஆகிய 4 பேரையும் தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார்.