< Back
மாநில செய்திகள்
கைதான தாய்-மகன்கள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர்
மாநில செய்திகள்

கைதான தாய்-மகன்கள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
26 Nov 2022 1:06 AM IST

கைதான தாய்-மகன்கள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஓட்டக்கோவில் கிராமம் அருகே கடந்த மாதம் போலி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த ராயம்புரம் காலனி தெருவை சேர்ந்த அர்ஜுனனின் மகன் பிரகாஷ் என்ற பிரகஸ்பதி(வயது 24), ஓட்டக்கோவில் காலனி தெருவை சேர்ந்த கந்தசாமியின் மனைவி மதியழகி, மதியழகியின் மகன்கள் இனிக்கும்சேட்டு(34) கோல்டு வினோத்(31) ஆகிய 4 பேரையும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து மதியழகியை திருச்சி மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் வெளியே வந்தால் பல்வேறு சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று பிரகஸ்பதி, மதியழகி, இனிக்கும்சேட்டு, கோல்டு வினோத் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி நேற்று உத்தரவிட்டார். அதன்படி அதற்கான ஆணை பிரதிகள் திருச்சி மத்திய சிறையிலும், திருச்சி மகளிர் சிறையிலும் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்