< Back
மாநில செய்திகள்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 1:02 AM IST

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று காலை பழஞ்சநல்லூர் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை அருகே உள்ள வடக்குப்பாளையம் புது காலனியை சேர்ந்த சிற்றரசன் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 22), 17 வயதுடைய சிறுவன் என்பதும், இவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் சேர்ந்து இதுவரை 5 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேர் மற்றும் வடக்குப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் தேவதென்னவன், ஆனந்தராயர் மகன் ஆமோன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்