< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு: துணைக்குழு  அமைத்து அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு: துணைக்குழு அமைத்து அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
5 Nov 2022 9:44 PM IST

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய துணைக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் துணைக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த குழுவில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை துணைச்செயலாளர், மனிதவள மேம்பாட்டுத்துறை துணைச்செயலாளர், சட்டத்துறை துணைச்செயலாளர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணைச்செயலாளர், உட்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்