< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மது விற்ற 4 பேர் சிக்கினர்
|17 Jan 2023 12:15 AM IST
போடியில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி நகர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி பகுதியில் மதுபானம் விற்ற சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்த திருகுமார் (வயது 37), வெண்ணிமலை தோப்பு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (34), குலாலர்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (62), பிரகாஷ் (35) ஆகிய 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த 16 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.