< Back
மாநில செய்திகள்
ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 4 பேர் ைகது
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 4 பேர் ைகது

தினத்தந்தி
|
9 Oct 2023 1:23 AM IST

ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 4 பேர் ைகது செய்யப்பட்டனர்.

வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (62). ஆட்டோ டிரைவர். இவர் வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டிக்கு சவாரி சென்று விட்டு வத்திராயிருப்புக்கு ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது வத்திராயிருப்பு - கூமாபட்டி சாலையில் வந்த போது 4 பேர் ஆட்டோவை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ராஜாவை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.5,730, ஏ.டி.எம்., ஆதார் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடா்பாக கூமாபட்டியை சேர்ந்த மகேந்திரன் (20), மதன்குமார் என்ற வீரகுரு (20), செல்வம் (23) உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்