< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் படுகாயம்
|28 May 2022 12:25 AM IST
மொரப்பூர் அருகே புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மொரப்பூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் (வயது 39), அருள் (35), கோகுல்நாத் (24), மனோஜ் பிரபாகரன் (26) ஆகிய 4 பேரும் ஒகேனக்கல்லுக்கு காரில் சுற்றுலா வந்தனர். நேற்று காலை அவர்கள் மொரப்பூர் கசியம்பட்டி அருகே வந்த போது கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.