< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 தேர்வில் காப்பியடித்த 4 பேர் பிடிபட்டனர்
மாநில செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் காப்பியடித்த 4 பேர் பிடிபட்டனர்

தினத்தந்தி
|
24 May 2022 6:30 AM IST

பிளஸ்-2 பொது தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட 4 மாணவர்கள் பிடிபட்டனர்.

சென்னை:

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம், புள்ளியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல் உள்பட பல்வேறு பாடத்துக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக (காப்பி அடித்ததாக) திருச்சி மாவட்டத்தில் வரலாறு, உயிரியல் பாடத்தில் தலா ஒருவர் என 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு, உயிரியல் பாடத்தில் தலா ஒருவர் என 2 பேர் என மொத்தம் 4 பேர் பிடிபட்டனர்.

மேலும் செய்திகள்