< Back
மாநில செய்திகள்
லாரியில் டீசல் திருடிய 4 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

லாரியில் டீசல் திருடிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
11 Aug 2023 1:25 AM IST

லாரியில் டீசல் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் எந்திரத்துடன் கூடி லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று உப்பிலியபுரம் மெயின்ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் டீசல் நிரப்பியுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது டீசல் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷின் விசாரணையில், லாரி டிரைவர் வெங்கடாசலபுரம் அக்ரஹாரத்தெருவை சேர்ந்த சசிகுமார்(வயது 45) துணையுடன் அப்பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் லாரி உரிமையாளர் திருவெறும்பூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த செந்தில்குமார்(43), யோகமூர்த்தி(20), டிரைவர் ஆனந்தன்(47) ஆகிய 4 பேர் சேர்ந்து சுமார் 500 லிட்டர் டீசலை திருடியது தெரியவந்தது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்