< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்களை கடத்திய 4 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்களை கடத்திய 4 பேர் கைது

தினத்தந்தி
|
26 Jun 2023 1:42 AM IST

திசையன்விளையில் புகையிலை பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியராஜ்குமார், ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை- சாத்தான்குளம் ரோட்டில் உள்ள திசையன்விளை பேரூராட்சி உரக்கிடங்கு அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான புகையிலை பாக்கெட்டுக்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வீராக்குளத்தைச் சேர்ந்த சேகர் (வயது 32), குலையன்கரிசலைச் சேர்ந்த மாரிராமன் (வயது 35) திசையன்விளை- இட்டமொழி ரோடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 36), சவேரியார்புரத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.76 ஆயிரத்து 387 மதிப்பிலான புகையிலை பொருட்கள், ரூ.11 ஆயிரத்து 571 ரொக்கப்பணம் மற்றும் ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவான தூத்துக்குடி முள்ளக்காடு சுந்தர்நகரைச் சேர்ந்த ராமமூர்த்தியை (வயது 45) போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்