< Back
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
21 Nov 2022 12:15 AM IST

விருத்தாசலத்தில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்கதுரை தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கொல்லையை சேர்ந்த துரைசாமி (வயது 42); விருத்தாசலத்தை சேர்ந்த சதீஷ் (31), ஆனந்த் (29), கார்குடலை சேர்ந்த குமார் (34) ஆகியோர் தனித்தனியாக அந்தந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைஅருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 139 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்