< Back
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

விருத்தாசலம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வேல்முருகன் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தங்களது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக சித்தலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி சரஸ்வதி (48), வெங்கடேசன் மனைவி பழனியம்மாள் (48) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குப்பநத்தம் ரோட்டு தெருவில் உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை விற்றதாக ராஜேந்திரன் மனைவி அஞ்சலை (54) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்