< Back
மாநில செய்திகள்
சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
7 Nov 2022 12:34 AM IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ராமலிங்கம் மற்றும் ராபர்ட் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (வயது 52) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கீழ்தனியாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் மகன் குப்புசாமி (44), மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த தேவராசு மகன் முருகன் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இது தவிர சாராயம் விற்றதாக கீழ்தனியாலம்பட்டை சேர்ந்த குப்புசாமி மனைவி அமுதா (55) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்