தேனி
மதுபானம் விற்ற 4 பேர் கைது
|மதுபானம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் மூலக்கடை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் 20 மதுபாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 44), கிருஷ்ணன் (32) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், தும்மக்குண்டு கிராமத்தில் மதுபானம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த அன்பு (36) என்பவரை வருசநாடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடகரை உழவர் சந்தை அருகே மதுபானம் விற்ற அழகர்சாமிபுரத்தை சேர்ந்த ராஜா (59) என்பவரை பெரியகுளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் கைது செய்தார்.