< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மது விற்ற 4 பேர் கைது
|15 Oct 2023 11:05 PM IST
மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தோட்டக்குறிச்சி மல்லாங்கோவில் பகுதியில் தோட்டக்குறிச்சியை சேர்ந்த பாண்டித்துரை (வயது 49), தளவாபாளையத்தில் அதே பகுதியை சேர்ந்த அர்சுனன் (58), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் (57), தவிட்டுப்பாளையத்தில் மலையம்பாளையத்தை சேர்ந்த இளங்கோவன் (56) ஆகியோர் மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.