< Back
மாநில செய்திகள்
மது விற்ற 4 பேர் கைது
நீலகிரி
மாநில செய்திகள்

மது விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
16 Aug 2023 12:15 AM IST

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி: சுதந்திர தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் ஊட்டி புதுமந்து போலீசார் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கல்லட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கூடலூர் வண்டிபேட்டை பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவர் ரகசியமாக வைத்து கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்றது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, கூடலூர் காசிம்வயலை சேர்ந்த சேகர் (வயது 54) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாட்டவயல் கல்பாரா பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற ஜேக்கப், ஊட்டி அருகே இடுஹட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்