< Back
மாநில செய்திகள்
சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
மாநில செய்திகள்

சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது

தினத்தந்தி
|
1 April 2024 10:58 PM IST

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே வீராணம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார். சுரேஷ் என்ற அந்த நபரை மடக்கிப் பிடித்த போலீசார் பைக்கை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளன.

விசாரணை செய்ததில் சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்து, அதில் 2 குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும் ஒரு குண்டை கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாகவும், 3 குண்டுகளைக் கடந்த 20-ம் தேதி வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் தானும் கார்த்திக் என்பவரும் சேர்ந்து வெடிக்க வைத்து பள்ளி சுவரைச் சேதப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் சுரேஷ், கார்த்திக், மனோ சங்கர், நாகராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்