< Back
மாநில செய்திகள்
பெண்கள் உள்பட 4 பேர் கைது
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பெண்கள் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
20 March 2023 12:15 AM IST

மணல்மேடு பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருந்த பெண்கள் உள்பட 4 பேர் கைது

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருந்த பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

மணல்மேடு பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.கொற்கை காலனி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி சங்கீதா (வயது 33) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து போலீசார் சோதனை செய்த போது, அங்கு 45 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 45 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

இதேபோல் தாழஞ்சேரி பகுதியில் ரஜினி மனைவி ரீனா (42) என்பவரின் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த 45 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், காளி செட்டித்தோப்பை பகுதியை சேர்ந்த ஆனந்த் (48), காளி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாரூக் (70) ஆகியோர் பதுக்கி வைத்திருந்த தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதா, ரீனா, ஆனந்த், பாரூக் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்