< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி - தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது
|14 Oct 2023 10:35 PM IST
கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்,
கும்பகோணம் மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம், ஏராளமானோரிடமிருந்து கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்வதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகாரளித்தனர்.
புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து கணினிகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக தந்தை, மகன் உள்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.