< Back
மாநில செய்திகள்
குடோனில் இரும்பு பொருட்களை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

குடோனில் இரும்பு பொருட்களை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
19 Feb 2023 2:00 AM IST

குடோனில் இரும்பு பொருட்களை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இரும்பு பொருட்கள் திருட்டு

திருச்சி பீமநகர் கணபதி நகரை சேர்ந்தவர் முகமதுசுரேக்(வயது 47). இவர் வரகனேரி மேட்டுத்தெருவில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இதற்காக அப்பகுதியில் குடோனும் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு தூங்கச்சென்றார். மீண்டும் குடோனை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குடோனுக்குள் சென்று பார்த்தபோது, ரூ.1 லட்சம் மதிப்பிலான இரும்பு தகடுகள் மற்றும் தாமிர ஒயர்கள் திருட்டு போய் இருந்தன. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் முகமதுசுரேக் புகார் அளித்தார்.

4 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி பாலக்கரை பருப்புக்கார தெருவை சேர்ந்த டேவிட் (வயது 21), காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (20), எடத்தெரு பகுதியில் பிள்ளை மாநகர் பகுதியை நேர்ந்த பிரசன்னா (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்