< Back
மாநில செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
23 Oct 2023 1:28 AM IST

சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 57). இவருக்கு பாமா (45) என்ற மனைவியும், பாலாஜிகிஷோர் (23) என்ற மகனும், ஜெயதர்ஷினி (18) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் ரமேஷ் குமார் நேற்று காலை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து அவருடைய உறவினர்கள், சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே போலீசார் ரமேஷ்குமார் வீட்டிற்கு சென்றனர்.

அதற்குள் ரமேஷ்குமார், அவரது மனைவி பாமா, மகன் பாலாஜி கிஷோர், மகள் ஜெயதர்ஷினி ஆகியோர் விஷத்தை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர்கள் 4 பேரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ரமேஷ்குமார் தனது குடும்பத்துடன் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இ்ச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்