கிருஷ்ணகிரி
வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
|கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் குமாரபிள்ளை (வயது 75). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இவர், திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் தமிழரசன் (19). இவர் அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக தமிழரசன் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
இளம்பெண்
தேன்கனிக்கோட்டை அருகே அரசகுப்பம் அருகே பென்சுப்பள்ளி ஊரை சேர்ந்த நாகராஜ் மகன் கிஷோர் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் இருந்ததாக தெரிகிறது. கடன் பிரச்சினையால் கிஷோர் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
தேன்கனிக்கோட்டை அருகே அய்யூரை அடுத்துள்ள ஜவனசந்திரம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் மனைவி மஞ்சுளா (32). இவர்களுக்கு 2 மகன்கள்உள்ளனர்.
இதில் ஒரு மகனுக்கு தவணை தொகை செலுத்தும் முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்துள்ளனர். இந்த தவணை தொகை கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மஞ்சுளா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணைநடத்தினர்.