< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
3 Jun 2022 11:18 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பெண்

கிருஷ்ணகிரி தாலுகா செம்படமுத்தூர் அருகே எஸ்.மோட்டூரை சேர்ந்தவர் அம்பிகா (வயது 34). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அம்பிகா கடந்த 1-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை தாலுகா முனீஸ்வரன் நகர் தாவரக்கரை சாலையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் சரியான வரன் அமையவில்லை. இதனால் மனமுடைந்த நந்தகுமார் பொம்மண்டப்பள்ளி அருகே நஞ்சாபுரத்தில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (39). தனியார் நிறுவன ஊழியர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பாகலூர் அருகே ஒரு தனியார் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வினோத்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கெலமங்கலம் அருகே உள்ள பச்சப்பனட்டி பக்கமுள்ளது கொத்தட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் எர்ரப்பா (48). என்ஜினீயர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த எர்ரப்பா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்