திருப்பத்தூர்
கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய முயன்ற சம்பவத்தில் 4 பேர் கைது
|கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய முயன்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 கர்ப்பிணி பெண்களுக்கும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே சிம்மனபுதூர் கிராமம் பூசாரி வட்டம் பகுதியில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுகுமார், வேடியப்பன் ஆகியோர் மூலம் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பரிசோதனை செய்ய முயன்ற சம்பவம் நடைபெற்றது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயக்கனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை கைது செய்தனர்.
சுகுமார், வேடியப்பன் உள்ளிட்ட மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு வீட்டில் சுகுமார் உள்ளிட்டோர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் ்அங்கு பதுங்கியிருந்த சுகுமார், வேடியப்பன், அவர்களுக்கு உதவியாக இருந்த ராச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவா, விஜய் ஆகியோரை கைது செய்தனர்.