செங்கல்பட்டு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே நகை பறிப்பு வழக்கில் 4 பேர் கைது
|நகை பறிப்பு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை கடந்த 16-ந்தேதி மிரட்டி அவர்களிடம் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் மதிப்புள்ள தங்கத்தோடு, ½ பவுன் தங்க மோதிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு சென்றனர்.
இது குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் வழிகாட்டுதலில் செங்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் மேற்பார்வையில் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டது சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி ஜெ.ஜெ.நகர் எம்.ஜி.ஆர். இணைப்பு தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (24), சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் ஆப்பூர் ஊராட்சி, பாரதியார் தெருவை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.