புதுக்கோட்டை
லாட்டரி சீட்டுகள், மது விற்ற 4 பேர் கைது
|கறம்பக்குடி, அன்னவாசல் அருகே லாட்டரி சீட்டுகள், மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கறம்பக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதன் பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் கறம்பக்குடி தாலுகா முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறவம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்ற நீலகண்டன் (வயது 50), சசிகுமார் (42), இளையராஜா (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்து 260, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மழையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அன்னவாசல் அருகே சித்தன்னவாசலில் மது விற்ற கூத்தினிப்பட்டியை சேர்ந்த சின்னத்துரை (40) என்பவரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ைகது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.