< Back
மாநில செய்திகள்
தொழிலாளி கொலையில் மேலும் 4 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தொழிலாளி கொலையில் மேலும் 4 பேர் கைது

தினத்தந்தி
|
12 Nov 2022 7:39 PM GMT

நெல்லையில் தொழிலாளி கொலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில் தொழிலாளி கொலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி கோனார் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (வயது 38). தொழிலாளியான இவர் கடந்த 10-ந்தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார், மாயாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்லிக்கோட்டையை சேர்ந்த மாடசாமி (24), சுபாஷ் (27) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

2-வது நாளாக...

இதற்கிடையே பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று நேற்று 2-வது நாளாக நடந்தது. அவர்களை நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து, கலெக்டர் விஷ்ணு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் யாதவ மகா சபை மாவட்ட செயலாளர் வள்ளி நாயகம், இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் பொட்டல் துரை யாதவ் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மாயாண்டியின் உறவினர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பூசாரி சிதம்பரம் என்ற துரை குடும்பத்தினருக்கும், மாயாண்டியின் மனைவிக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சீவலப்பேரியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

மேலும் 4 பேர் கைது

இதுகுறித்து பொட்டல் துரை யாதவ் கூறுகையில், ''பாதிக்கப்பட்டோர் சார்பில் விடுத்துள்ள நியாயமான கோரிக்கைகளைக்கூட மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர மறுக்கிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) நெல்லை மாவட்ட கலெக்டரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

இதற்கிடையே கொலை தொடர்பாக சீவலப்பேரியை சேர்ந்த மாசானமுத்து (20) மற்றும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். சிறுவர்கள் 3 பேரையும் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்