சென்னை
கிரிக்கெட் மட்டையால் ரவுடியை அடித்துக் கொன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது
|சென்னை அருகே கிரிக்கெட் மட்டையால் ரவுடியை அடித்துக்கொன்ற வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் நித்தியா (வயது 34). கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரமருது (34) செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. நித்தியாவுக்கும் வீரமருது ஆகிய இருவருக்கும் இப்பகுதியில் யார் பெரிய ரவுடி என்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீரமருது நித்தியாவை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்த நிலையில் தகராறை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறி நித்தியாவை மது அருந்த அழைத்து சென்ற வீரமருது, காரப்பாக்கம் இந்திரா காந்தி முதல் குறுக்கு தெருவில் உள்ள காலி மைதானத்தில் போதை தலைக்கு ஏறியவுடன் நித்யாவை வீரமருது மற்றும் அவரது நண்பர்கள் கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இது குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமருதுவை ஏற்கனவே கைது செய்தனர். அவரது நண்பர்களான குணா, மணிகண்டன், தினேஷ் பாபு, பிரவீன் குமார் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.