< Back
மாநில செய்திகள்
சென்னையில் மேலும் 4 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்: போக்குவரத்து மாற்றம்- 1,800 போலீசார் பாதுகாப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் மேலும் 4 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்: போக்குவரத்து மாற்றம்- 1,800 போலீசார் பாதுகாப்பு

தினத்தந்தி
|
9 May 2023 8:18 AM IST

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மேலும் 4 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள் கடைபிடிக்கப்படும்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் வருகிற 14, 23 மற்றும் 24-ந்தேதி ஆகிய 4 நாட்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளது.

மேற்கண்ட நாட்களில் போட்டி தொடங்கும் முன்பும், போட்டி முடிந்த பின்பும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள் கடைபிடிக்கப்படும்.

மேலும் 1,800 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்