சென்னை
14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் நலத்திட்ட உதவிகள்
|14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் நலத்திட்ட உதவிகளை சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா வழங்கினார்.
சென்னை,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரிய உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா வழங்கினார்.
இதில் ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் விபத்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், இயற்கை மரணம் மற்றும் ஈம சடங்கு செலவுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.17 ஆயிரம் வீதம் 8 பயனாளிகளுக்க ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
மேலும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 500 (ஒன்றின் விலை ரூ.83 ஆயிரத்து 500) மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான எளிதில் பிரெய்லி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருயும் வழங்கப்பட்டது.