மயிலாடுதுறை
ரூ.4½ லட்சத்தில் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி
|ரூ.4½ லட்சத்தில் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அமரும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் கண்ணன் சத்தியசீலன், 1-வது வார்டு உறுப்பினர் சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் லயோலா வரவேற்றார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.4½ லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகளை வழங்கினார். முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் பாட்டு, நடனம், பேச்சு போட்டி நடந்தது. தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, தமிழ்ஆசிரியர் பத்மாவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.