< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கர்ப்பப் பையில் 4 கிலோ கட்டி.! அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை
|15 July 2022 10:09 PM IST
கர்ப்பப் பையில் வளர்ந்திருந்த 4 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருவள்ளூர்,
உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவரின் கர்ப்பப் பையில் வளர்ந்திருந்த 4 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடம்பத்தூரைச் சேர்ந்த சசிகலா என்ற 37 வயது பெண்ணின் கர்ப்பப் பையில் கட்டி வளர்ந்தது கண்டறியப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்ஸன் தலைமையிலான மருத்துவர்கள் இணைந்து அறுவை சிகிச்சை மூலம் 4 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர்.
புற்று நோய் வரும் சூழலில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றிய நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட பெண் சசிகலா நலமுடன் உடல் நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்