< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
திருச்சி ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
|12 Oct 2023 1:39 AM IST
திருச்சி ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில், முதலாவது நடைமேடையில் சந்தேகத்திற்குரிய வகையில் பையுடன் நின்றிருந்த வடமாநில வாலிபரிடம் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் ஒடிசாவை சேர்ந்த பிரமோத்நாயக் (வயது 26) என்பதும், கஞ்சாவை வட மாநிலங்களிலிருந்து ஹவுரா விரைவு ரெயிலில் கடத்தி வந்து தமிழகத்தில் வினியோகிப்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல கடந்த 8-ந்தேதி ரமேஷ் சந்திரநாயக் என்பவரை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.