கரூர்
சாலை விபத்தில் 4 பேர் படுகாயம்
|சாலை விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து கரூர் நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கிழிஞ்ச நத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி( 52) என்பவர் விறகுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக, அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த கல்யாணி, வள்ளிமயில் ,கவிதா, வசந்த் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் சின்னையன் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.