< Back
மாநில செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவரின் கார் மோதி 4 பேர் படுகாயம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரின் கார் மோதி 4 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
24 May 2022 5:55 PM GMT

மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கார் மோதி 4 பேர் படுகாயம் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்

மயிலம்

மயிலம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோடிரைவர் கார்த்திகேயன்(வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு பெரும்பாக்கம் ஏரிக்கரை சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தனது உறவினர்களான திருநாவுக்கரசு மகன் ஏழுமலை(22), மெய்யழகன் மகன் ஏழுமலை(38), முருகன் மனைவி முனியம்மாள்(41) ஆகியோரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் காரில் பெரும்பாக்கம் மெயின்ரோட்டில் இருந்து ஏரிக்கரை வீதி வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த காரை தாக்கி கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதுபற்றிய தகவல்அறிந்து வந்த மயிலம் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அதன் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்