< Back
மாநில செய்திகள்
தமிழில் பேசு போட்டியில் வெற்றிபெற்றவருக்கு 4 கிராம் தங்ககாசு
விழுப்புரம்
மாநில செய்திகள்

'தமிழில் பேசு' போட்டியில் வெற்றிபெற்றவருக்கு 4 கிராம் தங்ககாசு

தினத்தந்தி
|
21 May 2023 6:45 PM GMT

திண்டிவனம் அருகே ‘தமிழில் பேசு’ போட்டியில் வெற்றிபெற்றவருக்கு 4 கிராம் தங்ககாசு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்

திண்டிவனம்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் தமிழில் பேசு, தங்ககாசு போட்டி மன்றம் நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் 5 நிமிடம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் பேசியபோது தமிழ் வார்த்தைகளை தவிர பிறமொழி வார்த்தைகள் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த தமிழன் என்பவர் திறம்பட பேசினார். அவருக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 4 கிராம் தங்க காசுகளை வழங்கி வாழ்த்தினார்.

முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய கோவிந்தராசு, இளையபெருமாள், மகாகவி பாரதியார் தமிழ் முழக்கம் செழிக்கட்டும் என்ற பாடலை பாடிய சொல்வேந்தன், தமிழன் ஆகியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக எங்கே தமிழ் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், நான் தூங்கும்போது அடிக்கடி எனக்கு ஒரு கனவு வரும். அந்த கனவில் வந்த 3 தெய்வங்கள் என்ன வரம் வேண்டும் என கேட்டனர். அதற்கு நான் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது. சொட்டு மழை நீர் கூட கடலில் கலந்து வீணாக கூடாது என 2 வரம் கேட்டேன். அதற்கு அந்த தெய்வங்கள் 2 வரம் போதுமா? என்று கேட்டனர். போதும் என சொன்னேன். கண் விழித்து பார்த்தபோது யாரையும் காணவில்லை என்றார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாட்சி, மாநில பொருளாளர் திலகபாமா, கவிஞர் ஜெயபாஸ்கரன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்