< Back
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி
சிவகங்கை
மாநில செய்திகள்

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலியானது

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த பில்லூர் அருகே அழுபிள்ளைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவருக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. சம்பவத்தன்று, வழக்கம் போல தான் வளர்க்கும் ஆடுகளை மாலையில் வீட்டின் அருகில் உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் திடீரென மின்னல் தாக்கியது.

இதில் ஆட்டு கொட்டகையில் நின்ற 4 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 7 ஆடுகள் மயக்கமடைந்தன. மின்னல் தாக்கி உயிர் இழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்