< Back
மாநில செய்திகள்
மண்டபம் அருகே நடுக்கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
மாநில செய்திகள்

மண்டபம் அருகே நடுக்கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

தினத்தந்தி
|
7 Jan 2023 8:39 AM IST

கடலுக்கு சென்ற மீனவர்கள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான மீனவர்களை சக மீனவர்கள் மற்றொரு படகில் தேடிச்சென்றனர்.

இந்த நிலையில், நடுக்கடலில் மாயமான 4 மீனவர்கள் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டனர். 4 ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர். சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் செய்திகள்