< Back
மாநில செய்திகள்
பட்டியல்-பழங்குடியின விவசாயிகளுக்கு 4 நாட்கள் வேளாண் பயிற்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

பட்டியல்-பழங்குடியின விவசாயிகளுக்கு 4 நாட்கள் வேளாண் பயிற்சி

தினத்தந்தி
|
14 March 2023 6:33 PM GMT

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியல்-பழங்குடியின விவசாயிகளுக்கு 4 நாட்கள் வேளாண் பயிற்சி

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வை.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நெற்பயிரில் அங்கக வேளாண்மை குறித்த 4 நாட்கள் பயிற்சி,நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்த மாதம்(மார்ச்) 4-வது வாரத்தில் நடக்கிறது.

இந்த பயிற்சியில் கலந்துகொள்ள சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். முதலில் பதிவு செய்யும் 80 நபர்கள் மட்டுமே இப்பயிர்ச்சிக்கு அனுமதிக்கபடுவார்கள். 4 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் அனுபவமிக்க வல்லுனர்களின் வகுப்புகள், செயல்முறை விளக்கங்கள், கருத்துக்காட்சி, கண்காட்சிகள் மற்றும் கண்டுனர் சுற்றுலா ஆகியவைகள் அடங்கும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் ஆர்வமுடைய, பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகள் பதிவுசெய்து இந்த பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்