< Back
மாநில செய்திகள்
சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி
விருதுநகர்
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி

தினத்தந்தி
|
8 Oct 2023 12:41 AM IST

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் நவராத்திரி விழாவுக்கும் 3 நாள் செல்லலாம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வருகிற 12-ந்் தேதி முதல் 15-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

ேமலும் சதுரகிரி கோவிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கியமான அம்பு விடும் நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவிற்கு, விழா தொடங்கும் நாளில் இருந்து பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் வனத்துறையினர் வருகிற 22 முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளனர். அன்றைய நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்