< Back
தமிழக செய்திகள்
திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி
தமிழக செய்திகள்

திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே மணல் திருட்டு சம்பவத்தி்ல் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள எல்ராம்பட்டு கிராமத்தில் தென்பெண்ணையாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மதன்மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், எல்ராம்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக மாட்டுவண்டிகளில் மணல் திருடி வந்த சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன் தங்கராசு, தாண்டவராயன் மகன் பெருமாள், திருவேங்கடம், சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்