கன்னியாகுமரி
நாகர்கோவிலில்கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
|நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா விற்பனை
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு அருகே செல்போன் மூலம் கஞ்சா விற்பனை நடப்பதாக நேற்று கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது இடலாக்குடி பகுதியை சேர்ந்த அஸ்லாம் (வயது 25) என்பதும் அப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும், இதில் மேலும் 3 பேர் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.
4 பேர் கைது
அதை தொடர்ந்து அஸ்லாமை போலீசார் கைது செய்து, 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் இடலாக்குடியை சேர்ந்த முகமது இர்பான் (20), அல் அனீஷ் (24) மற்றும் திட்டுவிளையை சேர்ந்த முகமது (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.