திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்
|திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் மப்பேடு, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் கஞ்சா பொட்டலங்களையும், அதனை கடத்த முயன்ற ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சுந்தரேசன் (வயது 21), பேரம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் (19), ஜஸ்வந்த் (19), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அஜீத் (22) என தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.